தேவகோட்டை: ஆலம்பட்டு அருகே சீமை கருவேல் ஏலம் – பழமையான பயனளிக்கும் மரங்கள் சட்டவிரோத வெட்டுவதாக குற்றச்சாட்டு
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஆலம்பட்டு மற்றும் விளாவடியேந்தல் வருவாய் கிராமங்களின் நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு இடங்களில் உள்ள சீமை கருவேல் மரங்களை வெட்டுவதற்கான ஏலம், ரூ.4,95,000க்கு அதே கிராமத்தைச் சேர்ந்த கே.ஆர். அசோகன் என்பவரால் எடுக்கப்பட்டது. ஐந்து மாத காலக்கெடுவுக்குள் சீமை கருவேல் மரங்களை வெட்டிக் அகற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.