தூத்துக்குடி: தெர்மல் நகர் சுனாமி காலனியில் மீனவரை இரும்பு கம்பி மற்றும் கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
தூத்துக்குடி தெர்மல் நகர் சுனாமி காலனியில் வசிப்பவர் சக்திவேல், இவர் முனீஸ்வரன் என்பவரின் படகில் மீன்பிடித் தொழிலுக்கு சென்று வந்த நிலையில், இவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போனதை தொடர்ந்து முனீஸ்வரனிடம் ரூபாய் 2 லட்சம் ரூபாய் வாங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். தொடர்ந்து வேலைக்கு வராததால் முனீஸ்வரன் சக்திவேலை வேலைக்கு வராதே எனக் கூறியுள்ளார். சக்திவேலுக்கு பணம் தேவைப்பட்ட நிலையில் காளி என்பவரின் படகில் கடல் தொழிலுக்கு சென்று வந்துள்ளார்.