அருப்புக்கோட்டை: பெரிய கட்டங்குடியில் பருத்திக்காட்டில் மேய்ந்த 3 ஆடுகள் உயிரிழந்த விவகாரத்தில் காட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
அருப்புக்கோட்டை அருகே பெரிய கட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்த பெத்தம்மாள் (35) ஆடுகள் மேய்க்கும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அங்குள்ள பருத்திக்காட்டில் பெத்தம்மாளின் ஆடுகள் மேய்ந்ததாகவும், அதனை விரட்டிய போது திடீரென மூன்று ஆடுகள் மயங்கி விழுந்து இறந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த காட்டில் பார்த்த போது அரிசியில் யூரியா கலந்து ஆங்காங்கே வைத்து இருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தாலுகா காவல் நிலைய போலீசார் ஏப்ரல் 8ம் தேதி வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.