விளாத்திகுளம்: வேம்பார் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் 2வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர் மற்றொருவர் படுகாயம்
தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடி அருகே உள்ள வடக்கு செவல் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீரா மகன் பெத்துராஜ் (23), காலனி தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் மேலத் தெருவைச் சேர்ந்தவர் மாரி லிங்கம் இவர்கள் 3 பேரும் நண்பர்கள். நேற்று இரவு 3 பேரும் ஒரே பைக்கில் வேம்பாரில் உள்ள கோவிலில் தசரா திருவிழாவை முன்னிட்டு நடந்த முளைப்பாரி ஊர்வலத்தை பார்ப்பதற்காக கிழக்குகடற்கரை சாலை ரோட்டில் வந்து கொண்டிருந்தனர்.