அருப்புக்கோட்டை: பஜார், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக இந்தியா கூட்டணியினர் பிரச்சாரம்
அருப்புக்கோட்டை, சின்ன பள்ளிவாசல் மற்றும் பெரிய பள்ளிவாசல் பகுதிகளில் இன்று தொழுகை முடிந்து வெளியே வரும் இஸ்லாமியர்களிடம் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர். அப்போது கேஸ் விலை, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என கூறி துண்டு பிரசுரங்கள் வழங்கி அவர்கள் வாக்கு சேகரித்தனர். மேலும் பஜார் பகுதியிலும் வாக்கு சேகரித்தனர்.