தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குலசேகரநல்லூர் கிராமத்தில் கடந்த வாரம் பெய்த பலத்த மழையின் போது ஆதிதிராவிட நலத்துறையினால் கட்டி கொடுக்கப்பட்ட வீடு ஒன்று இடிந்து விழுந்தது. வீட்டில் வசித்து வந்த லட்சுமணன் என்பவர் மனைவி சன்னாசி மற்றும் அவரது இரு மகள்கள் காயம் அடைந்தனர்.