மானாமதுரை: சின்னகண்ணனூர் கிராமத்தில் அருந்ததியர் சமூகத்தினர் 100 ஆண்டுகளாக சந்திக்கும் துயரம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சின்னகண்ணனூர் கிராமத்தில் சுமார் 30 அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த வாரம் இக்கிராமத்தைச் சேர்ந்த வேலு (38), குடும்ப பிரச்சினை காரணமாக உயிரிழந்தார். சென்னையில் ஓட்டுநராக வேலை பார்த்த அவர், சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யும்போது பெரும் சிரமம் ஏற்பட்டது.