கோவில்பட்டி: இளையரசனேந்தல் பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி பெண் பலி
திருவேங்கடம் சத்திரப்பட்டி பகுதியைச் சார்ந்தவர் ஆபிரகாம் ஞானதுரை. இவர் அங்கு உள்ள ஆலயத்தில் போதகராக பணியாற்றி வருகிறார். இவரும் இவரது மனைவி குணசெல்வியும் கோவில்பட்டியில் இருந்து இளையரசனேந்தல் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது கார் கட்டுப்பாட்டு இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே குணசெல்வி பரிதாபமாக உயிரிழந்தார். ஆபிரகாம் ஞானதுரை படுகாயம் அடைந்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்