செங்குறிச்சி அருகே உள்ள ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவரது வீட்டின் அருகே வசிக்கும் தினேஷ் என்பவர், முத்துலட்சுமியின் இடத்தில் மூங்கில் படல் அமைத்ததாக கூறப்படுகிறது. இதனை முத்துலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் தட்டி கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் மற்றும் அவரது உறவினர்களான கருப்பன், வெள்ளைச்சாமி ஆகியோர் சேர்ந்து முத்துலெட்சுமி மற்றும் அவரது தாய் சின்னத்தங்கம் ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த முத்துலட்சுமி, சின்னத்தங்கம் ஆகியோருக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை.