தூத்துக்குடி: பழைய துறைமுகத்தில் மிதவை கப்பலில் விஷவாயுத்தாக்கி வடமாநில தொழிலாளி உட்பட 3பேர் பலி
தூத்துக்குடி பழைய துறைமுகத்திலிருந்து தனியார் நிறுவனத்திற்கு சரக்கு எடுப்பதற்காக முக்தா இன்ஃப்ரா என்ற நிறுவனத்திற்கு சொந்தமான பார்ஜில் பழைய துறைமுகத்திற்கு வந்திருக்கின்றனர். இந்நிலையில் பார்ஜின் கீழ்ப்பகுதியில் தண்ணீர் தேங்கி வாயு உருவாகி இருந்த நிலையில் அதை அகற்ற முயன்ற தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி மூன்று பேர் பலியானார்கள்.