சிவகாசி: சல்வார் பட்டி பகுதியில் வீடுகளில் தடை செய்யப்பட்ட பட்டாசுகள் தயாரித்தவர் கைது
விருதுநகர் மாவட்டம் சல்வார்பட்டியில் வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தவர் கைது... வீட்டில் பதுக்கி வைத்திருந்த சரவெடி பட்டாசுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு நடைபெறுவதை தடுக்கும் வகையில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றது