கிணத்துக்கடவு: காணியாலம்பாளையத்தில் தனியார் நிலத்தில் பாறை குழியில் குப்பை கொட்ட அனுமதித்த உரிமையாளருக்கு ₹25 ஆயிரம் அபராதம்
கிணத்துக்கடவு-காணியாலம்பாளையம் செல்லும் சாலையில் மயில்சாமி என்ற விவசாயிக்கு சொந்தமான நிலம் உள்ளது.இந்த நிலத்தில் பாறைகுழி ஒன்று உள்ளது. தற்போது அந்த பகுதியில் உள்ள விளைநிலம் சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள பாறைகுழியை தெர்மாகோல் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு ஜேசிபி எந்திரம் மூலம் மூடும் பணியில் ஈடுபட்ட போது, அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியதால் இதுகுறித்து பொதுமக்கள், நெகமம் போலீசார் மற்றும் கிணத்துக்கடவு வருவாய்த் துறையினருக்கு புகார்