தஞ்சாவூர்: கல்லூரி மாணவிகளின் கண்ணீர் அஞ்சலி : தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் கரூர் சம்பவத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி
கரூரில் தமிழ்நாடு வெற்றி கழகம் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியாகி உள்ளனர். இறந்தவர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டி தஞ்சாவூரில் இன்று காலை கல்லூரி மாணவிகள், பொதுமக்கள், பெண்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.