வேடசந்தூர் ஒன்றியம் பாலப்பட்டி ஊராட்சியில் விராலிப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்திற்கு செல்லும் நுழைவு பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. பாலம் இரண்டு இடங்களில் இடிந்து விழுந்ததாலும் மேலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதாலும் நான்கு சக்கர வாகனங்கள் கிராமத்திற்கு செல்ல முடியவில்லை. இதனால் கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் வெளியூரிலிருந்து வருபவர்கள் ஆபத்தில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக கிராமத்தினரே முற்களை வெட்டி போட்டு உள்ளனர்.