விருத்தாசலம்: மங்கலம்பேட்டை பகுதியில் சிறுவம்பார் பகுதியில் தீப்பற்றிய வைக்கோல் போர் தீயணைப்பு துறையினரால் உரிய நேரத்தில் அணைப்பு.
மங்கலம்பேட்டை அருகில் உள்ள சிறுவம்பார் கிராமத்தில் ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான வைக்கோல் போர் எதிர் பாரா வண்ணம் எரிந்து கொண்டு இருந்தது. உடனடியாக மங்கலம்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தீ மேலும் பரவாமல் கட்டு படுத்தப்பட்டது.