மானாமதுரை: அதிமுக சார்பில் சிப்காட் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் – போக்குவரத்து பாதிப்பு
மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலை காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும், பொதுமக்கள் உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாகவும் உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டி, கடந்த ஒரு வருடமாகவே தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே செப்டம்பர் 16ஆம் தேதி அனைத்து கட்சிகளும் இணைந்து கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டன.