நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியம், திருப்பூண்டி மேற்கு ஊராட்சிக்கு உட்பட்ட பிரதான கடைவீதி பேருந்து நிறுத்தம் அருகே, கடந்த 10 நாட்களாக மழைநீர் வடியாமல் தேங்கி குட்டை போல காட்சி அளித்து வருகிறது.டிட்வா புயலைத் தொடர்ந்து பெய்த கனமழையால் நிரம்பிய இந்த நீர், சரியான வடிகால் வசதி இல்லாததால் வெளியேறாமல் மாசடைந்து, கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பேருந்து பயணிகள், வணிகர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் நாள்தோறும் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.