சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வாக்கு அலுவலர்களால் (BLO)வீடு வீடாக சென்று படிவங்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA - 2) மூலமாக பெற்றால் முறைகேடுகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.