தூத்துக்குடி: வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை 2வது நாளாக மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை
தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று 17ஆம் தேதி வரை ஆரஞ்சுஅலார்ட் விடுக்கப்பட்டு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது மேலும் கடல் பகுதியில் பலத்த காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் ஆழ் கடலுக்கு செல்லும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.