பழனி: வரலாற்று சாதனை விற்பனையில் பழனி தேவஸ்தான பஞ்சாமிர்தம் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 2,65,940 டப்பாக்கள் விற்பனை
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஐய்யப்ப சீசன் துவங்கியதை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த ஆண்டு ( 2025 ) நவம்பர் 19 -ம் தேதி1,98,48 டப்பாக்கள் விற்பனை ஆகி முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டது. ஆனால் அதற்கு அடுத்த நாளான நேற்று அந்த சாதனையும் முறியடிக்கப்பட்டு நவம்பர் 20 -ம் தேதி இதுவரை இல்லாத வகையில் 2,65,940 டப்பாக்கள் விற்று அதிரடி சாதனை படைத்துள்ளது.