தூத்துக்குடி: அய்யனார்ஊத்து பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேருக்கு தலா ஆயுள்தண்டனை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
கடந்த 2019ம் ஆண்டு கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யனார்ஊத்து பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் அண்ணாமலை என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர்களான உடையார், கோதண்டராமர் ஆகியோர் சேர்ந்து முன்விரோதம் காரணமாக அய்யனார்ஊத்து பகுதியில் வைத்து அரிவாளால் தாக்கி கொலை செய்தனர். இதைத்தொடர்ந்து கயத்தாறு காவல் நிலைய போலீசார் உடையார் மற்றும் கோதண்டராமர் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.