புரசைவாக்கம்: சென்னை தலைமை செயலகத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ செங்கோட்டையன் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் இடம் வழங்கினார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக சபாநாயகர் அப்பாவுவிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கிவிட்டு செய்தியாளர்களிடம் 50 ஆண்டுகால உழைப்பிற்கு அதிமுகவின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி பரிசு கொடுத்துள்ளதாக வருத்தத்துடன் தெரிவித்தார்