தூத்துக்குடி: ஆறுமுகநேரியில் திமுக பிரமுகர் தசரா பிறை அமைத்து வழிபாடு நடத்த எதிர்ப்பு கண்டித்து ஆட்சியரகத்தை கிராம மக்கள் முற்றுகை
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த பல ஆண்டுகளாக அந்த பகுதியில்குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் ஆலய தசரா திருவிழாவிற்காக விரதம் இருந்து பல்வேறு வேடங்கள் அணிந்து சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இவ்வாறு விரதம் இருக்கும் பக்தர்கள் தசரா காலங்களில் வீட்டில் தங்காமல் வெளியே தசரா பிறை அமைத்து அதில் தங்கி வழிபாடு நடத்துவார்கள்.