தூத்துக்குடி: மழை வெள்ள நீர் விரைவு வடிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தெற்கு மண்டலத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்
தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சியில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து மனுக்களை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பெற்றுக் கொண்டார்.