குஜிலியம்பாறை: கணக்குப்பிள்ளையூரில் வலம்புரி செல்வ விநாயகர் ஆதிபட்டாளம்மன் கோவில் 48 ஆம் நாள் மண்டல பூஜை
குஜிலியம்பாறை தாலுகா கூம்பூர் ஊராட்சி கணக்குப்பிள்ளையூரில் வலம்புரி செல்வ விநாயகர், ஆதி பட்டாளம்மன் ஆலய 48 வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது. முன்னதாக பாறைப்பட்டி கணக்குப்பிள்ளை இல்லத்தில் இருந்து பூஜை பொருட்களை தாரை தப்பட்டை முழங்க அழைத்துக் கொண்டு விநாயகர் கோவில் சென்றனர். அதன் பிறகு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புண்ணிய தீர்த்தங்கள் விநாயகர் கோவிலில் இருந்து பூஜை செய்யப்பட்டு பட்டாளம்மன் கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்டு கணபதி ஹோமம், மூலஸ்தான அபிஷேக ஆராதனைகள் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.