பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம் சார்பில் மலையாளப்பட்டி ஊராட்சியில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது, கூட்டத்திற்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன், பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன், ஒன்றிய செயலாளர் நல்லதம்பி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்