குஜிலியம்பாறை: கரட்டுகோட்டையில் சட்டவிரோதமாக கொட்டாங்குச்சியில் கார்பன் தயாரிக்கும் தொழிற்சாலை
குஜிலியம்பாறை தாலுகா கரிகாலி கிராமம் கரட்டுக்கோட்டை பெருமாள் கோவில் அருகில் சட்டவிரோதமாகவும் நீதிமன்ற தடை உத்தரவை மீறியும் கொட்டாங்குச்சியில் கார்பன் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதனால் ஏற்படும் புகை காரணமாக அப்பகுதியில் உள்ளவர்களுக்கு சுவாச கோளாறு ஏற்படுவதாகவும் நிலத்தடி பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து இந்து முன்னணியின் மாவட்ட துணைத் தலைவர் கோம்பை கணேசன் புகார் அளித்துள்ளார்.