தூத்துக்குடி: தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல நீதிபதி ஜோதிமணியை கண்டித்து ஆட்சியரகம் முன்பு டி.எஸ்.எப். அணியினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தலில் ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக, ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டி.எஸ்.எப். அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்,“ஒருதலைப்பட்சமாக செயல்படும் நீதிபதி ஜோதிமணியே வெளியேறு!” என கோசங்களை எழுப்பினார்கள்.