மக்கள் நல பணியாளர்கள் என்று இருந்த எங்களை பெயரை அளித்துவிட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் என்று பெயர் மாற்றி உள்ளார். எனவே தமிழக முதல்வர் மக்கள் நல பணியாளர்களின் நலன் கருதி 2016 தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின் படி சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பினை அமுல்படுத்தி பணி அமர்த்திட வேண்டும் இறந்து போன பணியாளர்களுக்கும் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கும் நஷ்ட ஈடுகள் வழங்க வேண்டும் என்று கூறி கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்