தூத்துக்குடி: முத்தையாபுரம் - ஸ்பிக்நகர் பகுதியில் உள்ள நான்குவழிச் சாலையில் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
முத்தையாபுரம் -ஸ்பிக்நகர் - முள்ளக்காடு வரை நான்கு வழிச்சாலையில் மேல்புறமாக கடைகள், வணிக வளாகங்கள், குடியிருப்பு பகுதிகள் மிகுந்து மிகவும் போக்குவரத்து நெருக்கடியாக இருப்பதால், பல விபத்துக்களால் உயிரிழப்புக்கள் தொடர்ந்துக்கொண்டே வருகிறது. இதற்கு இந்தப்பகுதியில் அணுகுசாலை இதுவரை அமைக்கப்படாததே காரணம். பள்ளிக்கு படிக்கச் சென்ற மாணவர் உட்பட பல உயிர்களை பல காலமாக இழந்துக்கொண்டே இருக்கிறோம்.