தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தாமிரபரணி ஆற்றின் நீர்பிடிப்பு மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வுத்துறையின் சென்னை மண்டல மையத்தால் 15.10.2025 முதல் 17.10.2025 வரை மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவுறுத்தியுள்ளார்.