தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக பெய்த மழையில், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இன்று காலை 6.30 மணி நிலவரப்படி சூரங்குடியில் அதிகபட்சமாக 58 மிமீ, வைப்பாரில் 40 மிமீ, காடல்குடி 27 மிமீ, விளாத்திகுளம் 22 மிமீ, கழுகுமலையில் 21 மிமீ என மாவட்டத்தில் மொத்தம் 295.50 மிமீ மழையும் பெய்துள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.