தூத்துக்குடி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் ஆட்டோ கணேசன் தலைமையில் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்களை நீதிமன்றத்தில் வைத்து அவமதித்த ராக்கேஷ் கிஷோரை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இதில் விடுதலை சிறுத்தைகளை கட்சியினர் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.