வேடசந்தூர் தாலுகா வடமதுரை மற்றும் அய்யலூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் வேடசந்தூர் எம்.எல்.ஏ காந்திராஜன் கலந்துகொண்டு மொத்தம் 596 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இதில் வடமதுரை ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் காந்திமதி, கணேஷ்வதி, அய்யலூர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விநாயகம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.