சுக்காம்பட்டி கிராமம் எஸ் புதுப்பட்டி கிராமத்தில் 700 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நாள்தோறும் குப்பைகளை வீடு வீடாக சென்று சேகரிக்கும் தூய்மை பணியாளர்கள் மொத்தமாக அவரவர்கள் தெருவில் வைத்து விடுவார்கள் இதனை அரசால் வழங்கப்பட்ட பேட்டரி வாகனம் மூலம் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் கொண்டு சென்று குப்பை கிடங்கில் சேகரிக்க வேண்டும். இந்த சூழ்நிலையில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பேட்டரி வாகனம் பழுதடைந்தது.