தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடியில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. குறிப்பாக தூத்துக்குடி பழைய மாநகராட்சி பிஅன்டி காலனி, திரேஸ்புரம், இன்னாசியர்புரம், மற்றும் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது.