வேடசந்தூர் அருகே உள்ள கிழக்கு மாரம்பாடியில் பழமை வாய்ந்த புனித பெரிய அந்தோனியார் பேராலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் புனித அந்தோனியார் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வர். இந்த ஆண்டு புனித அந்தோணியார் கோயில் திருவிழா திருப்பலி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான பக்தர்கள் அங்கப் பிரதட்சணை நடைபெற்றது.