ஆவுடையார் கோவில்: 'மது ஒழிப்பு' மீமிசல் கடைவீதியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை இன்ஸ்பெக்டர் மாலதி துவக்கி வைத்தார்
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கடைவீதியில் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணியை மீமிசல் காவல் நிலைய ஆய்வாளர் மாலதி கொடியசைத்து துவக்கி வைத்தார். ரோட்டரி சங்க பிரதிநிதிகள் மாணவ மாணவிகள் ஆசிரியர் பொதுமக்கள் பேரணியில் பங்கேற்றனர்