கடவூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வரவனை, சுண்டுகுழிப்பட்டி, சக்கரக்கோட்டை, வேலாயுதம்பாளையம் ஆகிய பகுதிகளில் கரூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து அவர் பேசுகையில், பாஜக அரசு 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவதாகவும், தினசரி கூலி 319 ரூபாயாக உயர்த்தி வழங்கி உள்ளதாகவும் கூறி வாக்கு சேகரித்தார்.