மயிலாடுதுறை: கூட்டுறவுத் துறையின் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார
மயிலாடுதுறையில் கூட்டுறவுத் துறையின் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. எம்எல்ஏக்கள் ராஜகுமார், நிவேதா முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு, 6850 பயனாளிகளுக்கு ரூ.51 கோடியே 31 லட்சம் மதிப்பில் கடனுதவிகளை வழங்கினார். அப்போது, அவர் கூறுகையில், கூட்டுறவுத்துறை விவசாயிகளுக்காக, ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்காக, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்காக, மாற்றுத்திறனாளி