குஜிலியம்பாறை: கூம்பூரில் வாயில் ஓங்கி ஒரு குத்து... "இரண்டு பற்கள் காணவில்லை என புகார்"
கூம்பூர் அருகே உள்ள மாரப்பன்பட்டியை சேர்ந்தவர் உருமன் (வயது 56). இவர் பழனியம்மாள் என்பவரிடம் கூம்பூரில் உள்ள ஒரு இடத்தை 2012 ஆம் ஆண்டு விலைக்கு வாங்கியுள்ளார். அந்த இடத்தில் கடை வைப்பதற்காக கட்டிடமும் கட்டி உள்ளார். இந்த நிலையில் பழனியம்மாளுக்கு வாரிசுகள் இல்லாததால் அவரின் தங்கை உருமாயம்மாளின் நான்கு மகள்களில் ஒரு மகளின் மகன்கள் இரண்டு பேர் எங்களுக்கு சொந்தமான இடம் என்று கூறி கட்டிடத்தை இடித்ததுடன் உருமனின் வாயில் ஓங்கி குத்தியுள்ளனர். இதில் இரண்டு பற்கள் காணாமல் போனதாக உருமன் புகார்.