தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள கொல்லம்ரும்பு கிராமத்தில் சுமார் 2000 ஏக்கரில் ஆளும் கட்சியைச் சேர்ந்த நபர்கள் நடத்தும் கே கே எம் என்ற கல்குவாரி செயல்பட்டு வருகிறது விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் இந்த கல்குவாரியிலிருந்து வெட்டப்படும் கல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. மேலும் கல் எடுப்பதற்காக வெடி வைத்து தகர்ப்பதால் அருகே உள்ள கொல்லம் பரும்பு, சந்திரகிரி ,வீரபாண்டியபுரம், சுப்பையாபுரம், முத்துக்குமாராபுரம் குளத்தூர் உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.