புதுக்கோட்டை: பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு திமுக அதிமுக மதிமுக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு அவரது பிறந்த நாளை முன்னிட்டு திமுக, அதிமுக, மதிமுக,ஓபிஎஸ், ஆதரவாளர்கள் அடுத்தடுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கோஷம் எழுப்பி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உறுதிமொழி ஏற்றனர். திமுக சார்பாக அமைச்சர்கள் மெய்யநாதன், ரகுபதி , அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மதிமுக சார்பாக மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி, ஓபிஎஸ் ஆதரவாளர் ராஜசேகர் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.