பந்தலூர்: எலியாஸ் கடையில் வாகனங்களை வழி மறித்து நின்ற காட்டு யானை
நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்துள்ள எலியாஸ் கடை பகுதியில் இன்று மாலை 05.30 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை சாலையில் முகாமிட்டு இருந்தது. இதனால் அவ்வழியாக வந்த அரசு பேருந்து, கார், இரு சக்கர வாகனங்கள் வெகு தூரத்திற்கு முன்பே நிறுத்தபட்டது. தொடர்ந்து வனத்துறையினர் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு சிறிது நேரத்தில் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்