மரக்காணம்: பாண்டி ரோடு தனியார் மண்டபத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் திமுகவுடன் இணைந்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் ரவிக்குமார் போட்டியிடுகிறார். அதற்காக நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இன்று மரக்காணம் பாண்டி ரோடு பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் மஸ்தான் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ரவிக்குமாரை அறிமுகப்படுத்தினார்.