திண்டுக்கல் மலை அடிவாரத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் கேஎஃப்சி பால் பந்தாட்ட கழகம் சார்பில் பொங்கல் விழாவினை முன்னிட்டு 14 ஆம் ஆண்டு ஐவர் கால்பந்தாட்ட மாநில போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார். முதல் போட்டியில் திண்டுக்கல் எஸ் டி எஸ் ஏ அணியும், சென்னை ஜேப்பியார் டர்ப் அணியும் மோதின.