திருச்செந்தூர்: சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலானது சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.