தஞ்சாவூர்: அமமுக கூட்டணி அமைக்கும் கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும் : தஞ்சாவூரில் டிடிவி தினகரன் திட்டவட்டம்
தஞ்சாவூரில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு அவரது பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செய்த பின்பு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களிடம் கூறுகையில், நாங்கள் யாருடன் கூட்டணி வைக்கிறோமோ அவர்கள் தான் வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பார்கள், இதை ஆணவத்தில் சொல்லவில்லை. உறுதியாக சொல்கிறேன். இது நிச்சயம் நடக்கும் என்று தெரிவித்தார்.