இளையாங்குடி: கொங்கம்பட்டியில் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் முன்னாள் MLA நாகராஜன் பங்கேற்பு
கொங்கம்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு இன்று ஞாயிறு பகல் சுமார் 2 மணி அளவில் இளையான்குடி தெற்கு ஒன்றிய கிளைக் கழகம் சார்பில் கொங்கம்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கிளைக் கழகச் செயலாளர் Bk கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.