பேராவூரணி: காய்ந்த கிடக்கும் முக்கிய மூன்று குளங்கள்: சம்பா சாகுபடி செய்ய இயலுமா என்ற வேதனையில் பேராவூரணி விவசாயிகள்
தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் உள்ள கடைமடை பகுதியில் உள்ள மூன்று குளங்கள் நீர்வழிப் பாதை சரியாக தூர்வாரப்படாததால் காய்ந்து போய் கிடக்கின்றன. இதனால் சம்பா சாகுபடி செய்ய இயலுமா என்ற வேதனையில் விவசாயிகள் ஆழ்ந்துள்ளனர். விவசாயப் பணி நடக்காவிடில் 1500 விவசாயத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையும் உள்ளது.